ராட்டினம்

பதிவின் வடிவம்

திகாலை 4.30 மணி. சுமித்திரா  சிறிது தலைவலியுடனே எழுந்தாள். அலைபேசியில் மணியைப்பார்த்த பின்புதான் தான் நன்றாக தூங்கிவிட்டதை உணர்ந்தாள். பாதகம் ஒன்றுமில்லை ஆட்டோ பிடித்து 5 மணிக்குள் மெஜஸ்டிக்  சென்று விட்டால் முதல் பேருந்தில் ஏறி 6 மணிக்குள் வீட்டுக்கு சென்றுவிடலாம். மஞ்சு எழுவதற்குள் சென்றுவிடவேண்டும். நிச்சயம்  சென்றுவிடலாம்.  அடுத்த சில நொடிகளில், மாடிப்படிகளில்  இருந்து இறங்கி தெருமுனைக்கு வந்தாள். ஆட்டோ கிடைப்பதில் சிரமம் ஒன்றும்  ஏற்படவில்லை, 50 ரூபாய் என்றான் ஆட்டோ காரன். பேரம் பேசாமல் ஏறிக்கொண்டாள்.

முதல் பேருந்து இன்னும் புறப்படவில்லை. பேருந்தில் ஏறி திறந்திருந்த ஜன்னலை நன்றாக இழுத்து மூடிவிட்டு சாவகாசமாக அமர்ந்தாள். மணி 4.50 தான். நடத்துனரும், ஓட்டுனரும் வெளியே தேநீர் அருந்திக்கொண்டுருந்தனர். பேருந்தில் வழக்கம் போல கூட்டம் ஒன்றும்  இல்லை. வழக்கமாக பூக்களை எடுத்துசெல்லும் ஒரு பாட்டியும் இன்னும் சிலர் மட்டுமே இருந்தனர். பாட்டி எப்பவும் போல  புன்னகைத்தாள். சுமித்திராவும்  பதிலுக்கு பேருக்காக புன்னகைத்தாள். பேருந்து நகர தொடங்கியது. சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் பெற்றுக் கொண்டாள்.

பெரும்பான்மையான நாட்கள் இப்படி அதிகாலையிலே வீடு திரும்ப வேண்டியுள்ளது. அபூர்வமாக சில நாட்களில் மட்டும் நல்லிரவில்.  உடல் சோர்வான நாட்களில் வெளியே  செல்வதேயில்லை. நன்றாக இழுத்து மூடிக் கொண்டு படுத்துவிடுவாள். சனி ஞாயிறு கட்டாய விடுமுறை.  இது போன்ற அமைதியான பேருந்து பயணங்களிலே மஞ்சுவின் நினைப்பு தானாக வந்துவிடுகிறது. மஞ்சு 6 ஆம் வகுப்பு படிக்கிறாள்.  மஞ்சுவை  நன்றாக படிக்க வைத்து பெரிய பெரிய கண்ணாடிகள் பதியப்பட்ட  அலுவலகத்திற்கு  வேலைக்கு அனுப்ப வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே  சும்திராவுக்கு. மஞ்சுவும் நன்றாக தான் படிக்கிறாள். புதிதாக குடியேறிய வீடு மட்டும் தான் மஞ்சுவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. அருகில் வீடுகள் இல்லாத தனிமை கட்டிடம். பழைய வீடு இருந்த பகுதி நெருக்கமாக பல வீடுகள் இருந்த இடம். மஞ்சுவிற்கு தோழிகளும் அங்கு  அதிகமாக இருந்தனர்.

கைப்பையிலிருந்த சாவியை எடுத்து கதவை திறந்தாள். மஞ்சு இன்னும் எழுந்திரிக்கவில்லை. அருகில் சென்று நெற்றியை வருடி முத்தம் கொடுத்தாள்…… பின்னர் அடுத்த சில நிமிடங்களில் குளியலை முடித்து விட்டு காலை உணவுக்கான வேலைகளில் ஆயத்தமானாள். மஞ்சுவை பள்ளிக்கு அனுப்ப வேண்டும். 7.30 மணிக்கு பள்ளி பேருந்து  எவ்வித தாமதமும் இன்றி வந்துவிடும். குளிப்பாட்டுதல், உணவு பரிமாறுதல் போன்று மஞ்சுவிற்காக செய்யும் வேலைகளை முழு திருப்தியுடனே செய்தாள். அதில் இருந்த மகிழ்ச்சியை முழுவதுமாக அனுபவித்தாள் சுமித்திரா. நிமிடங்கள் கடந்தன. மஞ்சுவை பள்ளிக்கு அனுப்பிவைத்தாயிற்று. அதீத சோம்பலாக படுக்கையில் கண் அயர்ந்தாள்.

2 மணிக்கு தான் கண்விழித்தாள் சுமித்திரா. மதிய உணவாக பிரட், முட்டை மற்றும் பால். 4.15 மணிக்கு மஞ்சு வழக்கம் போல சோம்பலுடனே வீடு திரும்பினாள். அடுத்த ஒரு மணி நேரம் மஞ்சுவின் அன்றைய பள்ளி விடயங்களை விலாவரியாக கேட்பது சுமித்திராவிற்கு வாடிக்கையான ஒன்று. அடுத்த ஒரு மணி நேரம் அவ்வாறே கடந்தது.  பின்னர் மஞ்சுவிற்காக இரவு உணவு தயாரிக்க ஆயத்தமானாள். சப்பாத்தியும் உருளைக்கிழங்கு குருமாவும் மஞ்சுவிற்கு பிடித்தமான உணவு. மணி 7. மஞ்சு இரவு உணவை முடித்து விட்டு படுக்கைக்கு சென்றாள். சுமித்திரா மீண்டும் நன்றாக குளித்து விட்டு உடைகளை எல்லாம் மாற்றி, தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கதவை வெளிவாக்கில் பூட்டி  மெஜஸ்டிகை  நோக்கி பயணமானாள்.

மெஜஸ்டிக்கில் ராகினி அக்கா சுமித்ராவிற்காக காத்துக்கொண்டிருந்தாள். சுமித்திரா ராகினி அக்காவை சந்தித்து, பின்னர் அன்றாட விடயங்களை  பேசிக்கொண்டே பேருந்து நிலைய நுழைவாயிலை நோக்கி நடந்தனர். நேரமாக நேரமாக பேருந்து நிலைய கூட்ட நெரிசல் ஒருவாறு குறைய தொடங்கியது. சில நிமிடங்கள் கடந்தன….

சுமார் 30 வயதுடைய, வட நாட்டுக்காரனைப் போன்ற தோற்றமுடைய  ஒருவன் சுமித்திரா அருகில் வந்து தன் கண் அசைவுகளினால் பேசினான்.

“ஒரு நைட்டுக்கு 800 ரூபாய்” என்றாள்  சுமித்திரா கெடுபிடியாக.

Advertisements

2 responses »

  1. வணக்கம்,
    முதலில் எனது வாழ்த்துக்கள். வார்த்தை வளமும், வாழ்க்கை வளமும் அப்பட்டமாய் தெரிகின்றது. வணக்கம்.
    அதிக நாளாக நானும் இதுபோன்ற நிமிடக் கதைகளை எழுத வேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பேன். இருப்பினும்… எனது வருடக் கதையை வறுடவதற்குள்ளாகவே… நேரம் வறண்டு விடுகின்றது. 😦

    முதல் பத்தியிலேயே சுமித்ராவின் சரிதம் ஏனோ முழுவதுமாய் தெரிந்துவிட்டது. சற்று பொருமையாக வெளிப்படித்தினால் இன்னும் நன்றாக இருக்குமென்பது எனது எண்ணம்.

    • மிக்க நன்றி தங்கள் கருத்துக்கு. 🙂 இனி வரும் கதைகளில் நான் நினைப்பதை எழுத்து மூலம் முழுதும் பிரதிபலிக்க முனைவேன். மற்றுமொரு முறை நன்றி..நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் தங்கள் கதைகளுக்கு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s